ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சின்ன திரை நடிகையுமான சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த ராகம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சங்கீதா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக் கிளி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர்.
தொடர்ந்து திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பெரிய திரையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் அஜித்தின் வலிமை உள்ளிட படத்தில் நடித்துள்ளார்.
நடிகை சங்கீதா, சினிமா காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதனிடையே ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதியினர் தாங்கள் கருவுற்று இருப்பதாக முன்னதாக அறிவித்து இருந்தனர்.
