வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்-2) கடுமையான விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்த வக்ஃப் வாரிய திருத்த மசோதா குறித்து எம் பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ” நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள்
சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சியின் தரப்பில் பேசிய பலரும் வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள்.
எந்த வெறுப்புணர்வும், பேதங்களும், பிரிவினை ஏற்படுத்திய காயங்களும் மக்கி மண்ணோடு மறைய வேண்டுமென இந்திய சமூகம் தொடர்ந்து முயன்று வந்ததோ, அவற்றையெல்லாம் மீண்டும் கிளறி தேசத்தின் தலைப்பு செய்தியாக்கும் அரசியலை பாஜக செய்து முடித்தது.
