அதேபோல், இலங்கைக்கு 44%, பங்களாதேஷுக்கு 37%, பாகிஸ்தானுக்கு 29%, தென்னாப்பிரிக்காவுக்கு 30%, இஸ்ரேலுக்கு 17%, சிங்கப்பூருக்கு 10% மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு 10% பரஸ்பர வரிகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன. மேலும், மியான்மருக்கு 44%, ஜோர்டானுக்கு 20% மற்றும் சிறிய தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு 48% என வரிவிதிக்கப்பட்டிருந்தன. அதில் சிறிய நாடுகள் சிலவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

