Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000′- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம் | Kidney Rs 75,000, liver Rs 90,000: Farmer protests, says he will sell body parts to pay off debt

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2025
in அரசியல் செய்திகள்
0
`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000′- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம் | Kidney Rs 75,000, liver Rs 90,000: Farmer protests, says he will sell body parts to pay off debt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சி செய்யும் பா.ஜ.க கூட்டணி தெரிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டதோடு விவசாயிகள் தங்களது கடனுக்கான மாதாந்திர தவணையை சரியாக கட்டவேண்டும் என்றும், விவசாயிகளின் கடனுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மாநில அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. வாசிம் மாவட்டத்தில் உள்ள அடோனி என்ற கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயி கடன் வாங்கி இருந்தார். அரசு அதனை தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மாநில அரசு கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிவிட்டதால், விவசாயி சதீஷ் தனது வங்கிக் கடனை அடைக்க தனது உடல் உறுப்புகளை விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு உடல் உறுப்பும் என்ன விலை என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டபடி சதீஷ் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

அதில் தனது சிறுநீரகத்திற்கு ரூ.75 ஆயிரமும், கல்லீரலுக்கு ரூ.90 ஆயிரமும், கண்ணிற்கு ரூ.25 ஆயிரமும் நிர்ணயித்து இருக்கிறார். அவரது போராட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதோடு சமூக வலைதளத்திலும் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இது குறித்து சதீஷ் கூறுகையில், “‘தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இப்போது நாங்கள்(விவசாயிகள்) கடனை அடைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். எங்களிடம் எதுவும் இல்லாத பட்சத்தில் எங்களால் எப்படி கடனை திரும்ப செலுத்த முடியும். எனவே வேறு வழியில்லாததால் எனது உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டார். அவர் தனது குடும்பத்தினரின் உடல் உறுப்புகளையும் விற்பனை செய்யப்போவதாக கூறி அதற்கான விலையையும் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

“கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்” திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிச்சாமி!

Next Post

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In