Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மக்களவையில் இன்று தாக்கலாகிறது வக்பு வாரிய சட்டத் திருத்தம்… மசோதா கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2025
in அரசியல் செய்திகள்
0
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா..! கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் முக்கிய கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துகளை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம்.

இது போன்ற வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து, மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, அந்த மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

திருத்தங்கள் என்னென்ன?

இந்த நிலையில், 44 திருத்தங்களுடன் வக்பு வாரிய மசோதாவை விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, 6 மாதங்களுக்கு ஒரு முறை வக்பு சொத்துகள் மீதான வருவாய் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில மற்றும் மத்திய வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத 2 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். பெண்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.

வக்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மாவட்ட நீதிபதி தலைவராகவும், மாநில அரசின் இணை செயலாளர் உறுப்பினராகவும் செயல்படுவார் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்பு வாரியத்திற்கு நன்கொடையாக வழங்க முடியும்.

வக்பு வாரிய சொத்துகளின் தரவுகள், பதிவுகள், தணிக்கை விபரங்கள், புகார்கள் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை வெளியிட டிஜிட்டல் இணையதளம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

8 மணி நேரம் விவாதம்

இவ்வாறு திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதா, மக்களவையில் இன்று நண்பகல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் நேரம் ஒதுக்க வலியுறுத்தி, மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதேவேளை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டால் திமுக நிச்சயம் எதிர்க்கும் என்றார்.

இதையும் படிங்க : “உத்தர பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கற்பிக்கப்படுகிறது..” – யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. பதில்

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பாஜக எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் இன்று மக்களவையில் இருக்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோல, மாநிலங்களவை நடவடிக்கைகளில் பாஜக உறுப்பினர்கள் நாளை கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகளில் மூன்று நாட்களுக்கு கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

First Published :

April 02, 2025 6:41 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Waqf Amendment Bill | மக்களவையில் இன்று தாக்கலாகிறது வக்பு வாரிய சட்டத் திருத்தம்… மசோதா கூறுவது என்ன? எதிர்ப்பு ஏன்?



.

Previous Post

சுட்டெரிக்கும் வெயிலுக்கு பாய் சொல்லுங்க.. ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கு!

Next Post

உதகை இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு; அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உதகை இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு; அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள்

உதகை இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு; அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In