கிருதுமால் நதியைப் பாதுகாக்கும் விதமாக, மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளம் அருகில் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதிக்கும், நிலையூர் கம்பிக்குடி கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடப்படும் தடுப்பணையில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன் தலைமையில் நிர்வாகிகள் கள ஆய்வு செய்தனர்.
