இதில், சிம்புவின் படம் ஆகஸ்ட் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்காக, உதவி இயக்குநர்கள் தேவைப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட அஷ்வத், தன்னிடம் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
– சிபாரிசு கிடையாது. மெரிட் மட்டும்தான்!
– உங்களுக்கான இடத்தைப் பெற முதல் மூன்று சுற்றுகளைக் கடக்க வேண்டும்.
– முதல் சுற்று உங்கள் சுயவிபரத்தின் (resume) அடிப்படையில் அமையும்.
– இரண்டாவதில் கொடுக்கப்படும் சூழலுக்கு ஏற்ப காட்சி ஒன்றை எழுத வேண்டும்.
– மூன்றாவது: என்னுடனான நேரடி நேர்காணல் இருக்கும். விடியோ கால் அழைப்பு கிடையாது (என்னிடமே proxy – ஆ? (டிராகன் திரைப்படத்தில் விடியோ காலில் பெரிய நிறுவனத்தை ஏமாற்றி நாயகன் வேலை வாங்குவதைக் குறிப்பிடுகிறார்))
– குறும்படம் எடுத்திருந்தாலோ இலக்கியத்தில் பரந்த வாசிப்பு இருந்தாலோ ஏற்கனவே நீங்கள் என் மதிப்பைப் பெற்றவராகிவிடுவீர்கள்.
– டெக்னிக்கல் திறமை வேண்டும். (எனக்கு அது தேவை)
– நேர்மையாக இருங்கள்- நான் ஒரு மோசமான காட்சியைச் சொன்னால் சூப்பர் சார் என சொல்லக் கூடாது!
– நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும், வெறும் சினிமா வதந்திகளை மட்டும் அல்ல.
– கண்டிப்பாக ஓராண்டு பணியாற்ற வேண்டும். கதை விவாதத்திலிருந்து படம் முடியும்வரை உடன் இருந்தால் மட்டுமே நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
– 8 பேர்தான் வேண்டும் என்பதால் தேர்வாகவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் வேறு இயக்குநரிடம் வேலைக்குச் சேர இந்த அனுபவம் உதவலாம்.
– கட்டாயமாக பார்ட்டி ஷூ தேவை (காரணம், நாம் அடிக்கடி ஜாலியாக இருப்போம்) எனத் தெரிவித்துள்ளார்.
