Last Updated:
Rajasthan holi | போரில் முகலாய வீரர்களை மோனார் வீரர்கள் வீழ்த்திய நாளை ‘Gunpowder Holi’ பண்டிகையாக கொண்டாடுவதாக மோனார் கிராம மக்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாவட்டம் உதய்பூர் அருகே, ‘Gunpowder Holi’ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. பொதுவாகவே ஹோலி பண்டிகை என்றாலே வண்ணங்கள் தான். வண்ண வண்ண கலர் பொடிகளை தூவி சந்தோஷங்களை வெளிப்படுத்தி கொள்வார்கள். ஆனால் ராஜஸ்தான் அருகே, துப்பாக்கிகளை வைத்து வினோதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
#WATCH | Rajasthan: ‘Gunpowder Holi’ celebrated in Udaipur’s Menar village, with firecrackers, cannons and firearms. (15/03)
As per the locals, this festival was first started by the warriors of this village to celebrate their victory after defeating the Mughals in a battle. pic.twitter.com/PEol4MwMg3— ANI (@ANI) March 16, 2025
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் மோனார் கிராமத்தில் புதுவிதமாக ‘Gunpowder Holi’ கொண்டாட்டம் களைகட்டியது. வினோதமான இந்த ஹோலி பண்டிகையில் பொதுமக்கள் போர் வீரர்களைபோல உடை அணிந்து, செயற்கை பீரங்கி மூலம் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
வழக்கமான பண்டிகையை போல் அல்லாமல், வரலாற்று ரீதியாக இந்த பண்டிகை அக்கிராமத்தில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. போரில் முகலாய வீரர்களை மோனார் வீரர்கள் வீழ்த்திய நாளை ‘Gunpowder Holi’ பண்டிகையாக கொண்டாடுவதாக மோனார் கிராம மக்கள் தெரிவித்தனர்.
March 16, 2025 12:54 PM IST


