Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. ”ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது” – அமித்ஷா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2025
in அரசியல் செய்திகள்
0
16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. ”ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது” – அமித்ஷா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 29, 2025 1:13 PM IST

சுக்மா-தந்தேவாடா எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமித்ஷா, “ஆயுதங்களும் வன்முறையும் மாற்றம் இல்லை; அமைதியும் வளர்ச்சியும் மாற்றம் கொண்டுவரும்” என்றார்.

News18News18
News18

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல்பாரி இயக்கத்தினர் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து அப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதில், நக்சல் இயக்கத்தினருக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில், நக்சல் இயக்கத்தினர் 16 பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர். அதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், இதுவரை 16 பேரின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நக்சல்பாரி இயக்கத்தினரிடம் இருந்து , ஏ.கே. 47, எஸ்.எல்.ஆர்., ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரைஃபில், 303 ரைஃபில், ராக்கெட் லாஞ்சர், பி.ஜி.எல். லாஞ்சர் மற்றும் வெடிப்பொருள்களை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் :  மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்.. சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஒரே நாளில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த 16 பேரை சுட்டுக் கொன்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நக்சல் இயக்கத்தின் மீது அடுத்த தாக்குதல். ஆப்ரேஷன் சுக்மாவில் நமது பாதுகாப்புப் படை வீரர்கள் 16 நக்சல்பாரிகளை சுட்டுவீழ்த்தியுள்ளனர் மற்றும் பெரும் அளவில் தானியங்கி ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Another strike on Naxalism!

Our security agencies have neutralised 16 Naxalites and recovered a massive cache of automatic weapons in an operation in Sukma.

Under the leadership of PM Shri @narendramodi Ji, we are resolved to eradicate Naxalism before the 31st of March 2026.…


— Amit Shah (@AmitShah) March 29, 2025

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் 31 மார்ச் 2026 ஆம் ஆண்டுக்கு முன் நக்சலிசத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; அமைதியும் வளர்ச்சியும் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

First Published :

March 29, 2025 1:11 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. ”ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது” – அமித்ஷா



.

Previous Post

மீண்டும் ஒரு நீட் பயங்கரம்! தேர்வு பயத்தால் சென்னையில் மாணவி தற்கொலை! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Next Post

இது செம டிவிஸ்ட்! X நிறுவனத்தை திடீரென விற்பனை செய்த எலான் மஸ்க்.. எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இது செம டிவிஸ்ட்! X நிறுவனத்தை திடீரென விற்பனை செய்த எலான் மஸ்க்.. எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

இது செம டிவிஸ்ட்! X நிறுவனத்தை திடீரென விற்பனை செய்த எலான் மஸ்க்.. எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In