Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 28, 2025
in அரசியல் செய்திகள்
0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 28, 2025 7:24 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 53% இருந்து 55% ஆக உயர்த்தப்படுகிறது. 48.66 லட்சம் ஊழியர்கள், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

News18News18
News18

மத்திய அரசின் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இரண்டு சதவிகிதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இரண்டு சதவிகிதம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தற்போதுள்ள அகவிலைப்படி 53 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல், முன்தேதியிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 48 லட்சத்து 66 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 66 லட்சத்து 55 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

இதையும் படியுங்கள் : குணால் கம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 6,614 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை அவ்வப்போது திருத்தப்படுகின்றன.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி 50 விழுக்காட்டில் இருந்து 53 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

First Published :

March 28, 2025 7:13 PM IST



.

Previous Post

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

Next Post

‘அறுவை சிகிச்சை செய்து திருநங்கை வேடம்.. பங்களாதேஷ் குடியேறிகள் 6 பேர் கைது’ டெல்லி போலீஸ் அதிரடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அறுவை சிகிச்சை செய்து திருநங்கை வேடம்.. பங்களாதேஷ் குடியேறிகள் 6 பேர் கைது’ டெல்லி போலீஸ் அதிரடி!

‘அறுவை சிகிச்சை செய்து திருநங்கை வேடம்.. பங்களாதேஷ் குடியேறிகள் 6 பேர் கைது’ டெல்லி போலீஸ் அதிரடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In