Last Updated:
343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஏன் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
இந்தியாவில் 343 மாவட்டங்களில் மட்டும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் சான்றிதழ் கட்டாயம் என்றால், பிற இடங்களில் முறைகேடுகள் நடைபெறாதா என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்க நகை விற்பனையின் போது, ஹால்மார்க் சான்றிதழை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி, விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படாததால், முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படியுங்கள் : “ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம்..” – ஆர்.ஆர்.பி. தேர்வு ரத்துக்கு சு. வெங்கடேசன் விமர்சனம்
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்தியாவில் சுமார் 800 மாவட்டங்கள் உள்ள நிலையில், 343-ல் மட்டும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கியது ஏன் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கினால், எஞ்சிய மாவட்டங்களில் முறைகேடுகள் நடக்காதா என்றும் நீதிபதிகள் வினவினர். இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
March 19, 2025 4:04 PM IST
“343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஏன்?” மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

