தமிழ்நாடு சட்டபேரவையில் தனித் தீர்மானம்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டபேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு நடத்தப்பட்டது. இதில் கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
