Last Updated:
வறுமை நிறைந்த சூழலில் இருந்து எப்படியாவது உயர வேண்டும் என்ற விடாமுயற்சியும், வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு நாம் பலரை உதாரணமாக காட்டலாம்.
எத்தனை சவால்கள், பிரச்சனைகள் வந்தாலும், தங்களது கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்த பல தொழிலதிபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனப் பல கனவுகளோடு இருக்கும் இளம் தொழில்முனைவோர்களுக்கு இவர்களது கதை உந்துசக்தியாக திகழ்கிறது. அப்படியொருவரைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
டிரைடென்ட் குழுமத்தின் (Trident Group) தொலைநோக்கு வெற்றிக்கு காரணகர்த்தாவாக இருக்கும் ராஜீந்தர் குப்தா, வருங்கால தொழில்முனைவோர்கள் உட்பட அனைவரையும் ஊக்கப்படுத்தும் வெற்றிக் கதையை தன்வசம் கொண்டுள்ளார். பஞ்சாப்பில் பருத்தி வியாபாரிகளின் குடும்பத்தில் பிறந்த குப்தா, சிறுவயதிலிருந்தே நிதி நெருக்கடியை எதிர்கொண்டார்.
14 வயதில், பணக் கஷ்டம் காரணமாக 9-ம் வகுப்பு முடித்தவுடன் பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தன்னை மட்டுமாவது பார்த்துக்கொள்ள பணம் வேண்டுமே என யோசித்து, மெழுகுவர்த்திகள் மற்றும் சிமென்ட் குழாய்கள் தயாரிப்பது போன்ற சிறிய வேலைகளை மேற்கொண்டார். இதன் மூலம் அவரால் ஒரு நாளைக்கு ரூ.30 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.
இந்த சூழ்நிலைகளிலிருந்து மீண்டு எழத் தீர்மானித்த குப்தா, 1980-களில் ஒரு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார். 1985-ம் ஆண்டில், 6.5 கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டில் அபிஷேக் இண்டஸ்ட்ரீஸ் என்ற உரத் தொழிற்சாலையை தொடங்கினார். 1991-ம் ஆண்டு வாக்கில், கட்டாய் மில்லை இன்னொரு நபருடன் இணைந்து நிறுவினார். இது இறுதியில் லாபகரமான தொழிலாக மாறியது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தில், ட்ரைடென்ட் குழுமத்தின் பெயரில் ஜவுளி, காகிதம் மற்றும் ரசாயனத் தொழில்களை விரிவடையச் செய்தார் குப்தா.
பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பல ஆலைகளை அமைத்து, ட்ரைடென்ட் நிறுவனத்தை வால்மார்ட், ஜேசிபென்னி மற்றும் லக்சரி மற்றும் லினன் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக ஆக்கி, அவர்களுக்கு சேவை செய்யும் உலகளாவிய அதிகார மையமாக தனது நிறுவனத்தை மாற்றினார். 2022-ம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக டிரைடென்ட் இயக்குநர்கள் குழுவிலிருந்து குப்தா விலகினார்.
Also Read: அளவோ சிறுசு.. பலனோ பெருசு.. உடல் சூட்டை சட்டுனு கூலாக்க இந்த ஒரு பொருள் போதும்!
ஆனால் இக்குழுமத்தின் முதன்மை நிறுவனமான டிரைடென்ட் லிமிடெட்டின் தலைவராக இன்றும் அவர் தொடர்கிறார். தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்புகள் காரணமாக அவருக்கு 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசி வழங்கி கௌரவித்தது. ரூ.13,800 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன், பஞ்சாப்பின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார் குப்தா.
March 27, 2025 10:24 AM IST
பள்ளி படிப்பை நிறுத்தியவர்.. ஒரு நாளைக்கு ரூ.30 மட்டுமே சம்பளம்.. இப்போது மிகப்பெரிய பணக்காரர்.. யார்?

