Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர அரசு அனுமதி – கோடையில் பற்றாக்குறை இருக்காது என்பதால் மக்கள் நிம்மதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2025
in அரசியல் செய்திகள்
0
சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர அரசு அனுமதி – கோடையில் பற்றாக்குறை இருக்காது என்பதால் மக்கள் நிம்மதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 7:29 AM IST

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திரா ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷ்ணா நீரால் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கப்படும்.

கண்டலேறு அணைகண்டலேறு அணை
கண்டலேறு அணை

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திரப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என்டிஆர் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு ஆந்திரா வழங்கி வருகிறது.

அதன்படி, ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா நதியின் குறுக்கே உள்ள கண்டலேறு அணையில் இருந்து சென்னையை அடுத்துள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வந்தடைகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் கடந்த ஜனவரி மாதம் சென்னையை ஒட்டியுள்ள நீர்த்தேக்கங்களில் தண்ணீர் அளவு போதுமானதாக இருந்ததாலும், தெலுங்கு கங்கை கால்வாய் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதாலும் ஜனவரி மாதத்திற்கான தண்ணீர் திறக்கப்படவில்லை.

தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு, ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத் துறை கடிதம் எழுதியது. இதையடுத்து, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கான தண்ணீரை திறக்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் நாளொன்றுக்கு 1075 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் நிலையில், கிருஷ்ணா நீரால் கோடைகாலத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கப்படும் என்பதால், சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

First Published :

March 20, 2025 7:29 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர அரசு அனுமதி – கோடையில் பற்றாக்குறை இருக்காது என்பதால் மக்கள் நிம்மதி



.

Previous Post

ஈரோடு – ஜோலாா்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து

Next Post

உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!

உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In