Last Updated:
சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது வல்லுறவு முயற்சியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது வல்லுறவு முயற்சியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
11 வயது சிறுமியின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து, ஒரு கால்வாய்க்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த வழியாக சிலர் வந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை விட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, கீழமை நீதிமன்றம் இதை POCSO சட்டம் மற்றும் IPC பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை முயற்சி என்று கூறியது. ஆனால், இந்தத் தீர்ப்பு எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஒரு பெண்ணின் மார்பகத்தைத் தொடுவது, பைஜாமா கயிற்றை அவிழ்ப்பது மற்றும் கால்வாயில் தள்ளிச் செல்ல முயற்சிப்பது ஆகிய செயல்கள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி எனக் கருதப்படாது என்று கூறியது.
மேலும் குற்றத்தைச் செய்வதற்கான “முயற்சி” மற்றும் “தயாரிப்பு” ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருப்பதாகவும், அது தயாரிப்பு நிலையைத் தாண்டி, செயல் நிலையை அடைந்திருக்க வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கமளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையானது.
இதையும் படிக்க: அமித் ஷாவை சந்தித்தது ஏன்.. பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? – டெல்லியில் ஈபிஎஸ் அளித்த விளக்கம்!
இந்தத் தீர்ப்பு பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வேதனை தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், உத்தர பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
March 26, 2025 12:56 PM IST
“மார்பகங்களைப் பிடிப்பது வல்லுறவு முயற்சியாகாது”- போக்சோ வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

