முன்னதாக, சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அமித்ஷா – ஈபிஎஸ் சந்திப்பின் போது தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,” 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
