Last Updated:
யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இதற்கு சம்மதித்த யானை பின்னர் வனத்துறையினரை ஓட ஓட விரட்ட தொடங்கியது.
வனத்துறையினரை யானை ஒன்று ஓட ஓட விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது எங்கே நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட வனப்பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வனத்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெலூர் தாலுகாவுக்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணி செய்தபோது காட்டு யானை ஒன்று ஊருக்குள் வர முயற்சித்தது.
இதனை பார்த்த வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இதற்கு சம்மதித்த யானை பின்னர் வனத்துறையினரை ஓட ஓட விரட்ட தொடங்கியது.
இதையும் படிங்க – சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்.. மாவோயிஸ்டுகள் 30 பேர் சுட்டுக் கொலை
இதனை தூரத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானையால் விரட்டப்பட்ட வனத்துறையினர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#कर्नाटक के हासन जिले में जंगली हाथी ने वन विभाग के कर्मियों को दौड़ाया, दोनों वनकर्मी किसी तरह अपनी जान बचाकर भागे।#Karnataka pic.twitter.com/E2NWX4VmwF
— Rohit Nandan Mishra (@RohitNandanMis3) March 18, 2025
இது தொடர்பாக வீடியோ எடுத்தவரை ஒரு சிலர் பாராட்டியுள்ளனர். ஆனால் இன்னும் சிலர் “பாதுகாப்பை உணராமல் இவர் எப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளனர்.
March 20, 2025 9:01 PM IST

