சென்னை: கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார். கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி(60) விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
வில்வித்தை பயிற்சியாளர், ஓவியர், சமையல் கலைஞர் எனப் பன்முகத் திறன் கொண்டவர். 1986-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இந்த நிலையில், ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று(மார்ச் 25) உயிரிழந்தார்.
