Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கால்வாயில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பட்டதாரி பெண்ணின் உடல்.. கார் டிரைவரின் குரூர செயல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2025
in அரசியல் செய்திகள்
0
கால்வாயில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பட்டதாரி பெண்ணின் உடல்.. கார் டிரைவரின் குரூர செயல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 9:52 PM IST

டெல்லியில் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி பெண்ணை, கார் ஓட்டுநர் கொலை செய்து, கல்லைக் கட்டி உடலை கால்வாயில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

டெல்லியில் சாவ்லா பகுதியில் உள்ள கால்வாயில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். அதில், கடந்த 12 ஆம் தேதி நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து உடலை போலீசார் காட்டினர். அப்போது, அது காணாமல் போன தங்களது மகள் கோமல் என்பதை பெற்றோர் உறுதி செய்தனர்.

இதையும் படியுங்கள் :  மத்திய இணை அமைச்சரின் மருமகன் சுட்டுக்கொலை.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

விசாரணையில் கோமல், கால் சென்டரில் வேலை செய்து வந்ததும், சம்பவத்து அன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசிஃப் மற்றும் அவரின் நண்பர் ஜுபைர் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் என்பதால், கடந்த 12 ஆம் தேதி ஆசிஃப்பின் காரில் கோமல் நம்பி ஏறியுள்ளார். ஆனால், அவர் நேராக வீட்டிற்கு செல்லாமல் பல இடங்களுக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்யுமாறு கோமலை ஆசிஃப் கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆசிஃப், தனது நண்பருடன் சேர்ந்து கோமலின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலில் கல்லை கட்டி கால்வாயில் வீசி சென்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தன்னை திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி பெண்ணை, கார் டிரைவர் கொலை செய்து, கல்லைக் கட்டி உடலை கால்வாயில் வீசியது டெல்லியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

March 20, 2025 9:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கால்வாயில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பட்டதாரி பெண்ணின் உடல்.. கார் டிரைவரின் குரூர செயல்



.

Previous Post

சிப்காட் தொழில்பேட்டை: சுற்றுச்சூழலை காக்க கவனம் கொள்ளுமா அரசு?

Next Post

ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In