சிறையை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளத் தயார்
சேகர்பாபுவை சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது குறித்த கேள்விக்கு, ”சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைகள்தான் எங்களை மாற்ற நினைத்திடும் சிறைச்சாலை. நீதிமான்களையே தலைக்கு மேல் இருப்பதற்கு ஒப்பாக பேசுபவர். சிறை என்றால் சிரித்த முகத்தோடு எதிர்கொள்ள தயார்” என சேகர்பாபு தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அமைச்சர், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய அவர், “மக்கள் பாஜகவுக்கு சப்பைக் கட்டு கட்ட தயாராக உள்ளனர்” என்று முடித்தார்.
