Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

800 பயணிகள் உயிரிழப்பு!…ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் – முத்தரசன்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 12, 2024
in Default
1
800 பயணிகள் உயிரிழப்பு!…ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் – முத்தரசன்!
52
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (11.10.2024) இரவு சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் செல்லும் பாக்மதி அதி விரைவு ரெயில், கவரப்பேட்டை அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் (கூட்ஸ்) மீது மோதி, அதன் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்ற தகவல் கிடைத்த போதிலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதைகளில் தடம் மாற்றி விடப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ரெயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

நாட்டின் மிகப்பெரும் போக்குவரத்து பொதுத் துறையான ரெயில்வே துறைக்கு தனி வரவு – செலவு தாக்கல் (பட்ஜெட்) செய்து வந்த முறையை மாற்றி, பொது வரவு – செலவு திட்டத்தில் சேர்த்து விட்டது. இதனால் அதன் மீது தனித்த கவனம் செலுத்தும் வாய்ப்பை பறித்து விட்டது. பா.ஜ.க. அரசின் ரெயில்வே துறை மந்திரி விபத்துகள் குறைந்து வருவதாக கூறுவதை, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 638 விபத்துக்களில் சுமார் 800 பயணிகள் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள விபரத்தை தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் மறுக்கிறது.

ஒரே முறையில் இயக்கப்படும் ரெயில்களை விரைவு வண்டி, அதிவிரைவு வண்டி, சிறப்பு வண்டி என பல பெயர்களிலும், தட்கல், பிரீமியம் என்ற பெயர்களிலும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதும், முன்பதிவு பயணச்சீட்டுகளை ரத்து செய்வதிலும், நடைமேடை கட்டணங்களிலும் பயணிகள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் பயண பாதுகாப்பு உட்பட அனைத்து சேவை வழங்குவதிலும் படுமோசமான நிலையே நீடிக்கிறது.

இந்த நிலையில் ரெயில்வே சேவையை தனியாரிடம் வழங்கி, அரசு விலகிக் கொள்ள முயற்சிப்பது மக்கள் விரோத செயலாகும். ரெயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கைவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசும், ரெயில்வே அமைச்சகமும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

காதலியுடன் பல முறை உல்லாசம்… அந்தரங்க போட்டோ காட்டி ரூ.20 லட்சம் பறிப்பு : வாலிபரின் வெறிச்செயல்!

Next Post

தசரா திருவிழாவில் பயங்கர தீ விபத்து!…பக்தர்கள் நிலை?…ஓலை குடிசை, 9 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
தசரா திருவிழாவில் பயங்கர தீ விபத்து!…பக்தர்கள் நிலை?…ஓலை குடிசை, 9 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்!

தசரா திருவிழாவில் பயங்கர தீ விபத்து!...பக்தர்கள் நிலை?...ஓலை குடிசை, 9 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    முத்தரசன் சொல்வது உண்மையே. நம் நாட்டைப் பொறுத்தவரை ரயில் விபத்துக்கள் நடப்பது அதில் மனித உயிர்கள் பலியாவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதற்கு முழுக்க காரணம் ரயில்வே துறை அலுவலர்களின் திறமையின்மையே. திறமை இல்லாத இது போன்ற அலுவலர்களை வைத்துக்கொண்டு நிர்வாகம் நடத்தினால் இதுபோன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் நடக்கத்தான் செய்யும். எனவே இந்த கவரப்பேட்டை விபத்துக்கு காரணமான அரசு அலுவலர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இருக்கும் அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள் இது போன்ற விபத்துக்கள் நடக்காது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In