Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

PK பேட்டியால் விஜய் அதிருப்தி? “விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி”- புஸ்ஸி விளக்கம்

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
March 2, 2025
in Default
1
PK பேட்டியால் விஜய் அதிருப்தி? “விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி”- புஸ்ஸி விளக்கம்
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். 2026 தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என பரவலாக பேசப்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் பேட்டி அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது.

தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.

தமிழக…

— N Anand (@BussyAnand) March 2, 2025

தவெகவின் நிலைப்பாடு, தேர்தல் வியூகம் குறித்த பிரசாந்த் கிஷோர் பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ள தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், “தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Source



Previous Post

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரின் ஆணுறுப்பை வெட்டி விடுவேன்..! யார சொல்றாரு அன்புமணி…?

Next Post

Enjoyment பற்றி பெரியார் சொன்னதையே நானும் செய்தேன்.. சீமான் பகீர் பேச்சு..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
Enjoyment பற்றி பெரியார் சொன்னதையே நானும் செய்தேன்.. சீமான் பகீர் பேச்சு..

Enjoyment பற்றி பெரியார் சொன்னதையே நானும் செய்தேன்.. சீமான் பகீர் பேச்சு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In