Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆளுநர் அழைப்பு… அஜித் ஆப்சென்ட்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 15, 2025
in Default
0
ஆளுநர் அழைப்பு… அஜித் ஆப்சென்ட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற பத்ம விருது வென்றவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பத்மவிருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித்குமார், பரத நாட்டிய கலைஞர் மற்றும் நடிகை ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, வேலு ஆசான் (கலை), குருவாயூர் துரை (கலை), கே.தாமோதரன் (சமையற்கலை), லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் – கல்வி – இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் – கட்டிடக் கலை), புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை) மற்றும் ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் – கல்வி), கிரிக்கெட் வீரர் அஸ்வின் (விளையாட்டு) ஆகிய 9 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

நடிகர் அஜித் தனது படங்களின் ப்ரோமோசன் நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக கலந்துக்கொள்வதில்லை. இந்த நிலையில் அவர் ஆளுநர் ஏற்பாடு செய்திருக்கும் பாராட்டு விழாவில் கலந்துக்கொள்வாரா என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பத்ம விருது வென்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஷோபனா, நல்லி குப்புசாமி, வேலு ஆசான், செஃப் தாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனினும் நடிகர் அஜித், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

அஸ்வின் கலந்துக்கொள்ளாத நிலையில் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

காதலர் தினம்: 100 பீட்சா ஆடர் செய்து காதலனை பழிவாங்கிய காதலி..

Next Post

ஒட்டியாணம், கிரீடம், தங்கதட்டு… ஜெயலலிதா நகைகள் தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
ஒட்டியாணம், கிரீடம், தங்கதட்டு… ஜெயலலிதா நகைகள் தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு!

ஒட்டியாணம், கிரீடம், தங்கதட்டு… ஜெயலலிதா நகைகள் தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In