“ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது” என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திருநகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, டெல்லி தேர்தல் குறித்து பேசினார். ஆம் ஆத்மி கட்சி தனது ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் ஆட்சியை இழந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, இந்தியா கூட்டணியைப் பாதுகாத்து பலப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியதே அவர்களின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
ஆம் ஆத்மி கூட்டணியில் தொடர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்றும், பாஜகவின் வெற்றி டெல்லிக்கு ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.


வெற்றி பெற்றால் அதற்கு ஒரு காரணம் சொல்வார்கள் தோல்வி அடைந்தால் அதற்கு ஒரு காரணம் சொல்வார்கள் இதுதான் அரசியல்