Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக பொதுக்குழு கூட்டம்: நாளை நடக்கிறது… 2026 தேர்தல் கூட்டணி ஆலோசனை

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
December 14, 2024
in Default
0
அதிமுக பொதுக்குழு கூட்டம்: நாளை நடக்கிறது… 2026 தேர்தல் கூட்டணி ஆலோசனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி ஒரு அரசியல் கட்சி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும் ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டியது அவசியம் ஆகும். அதிமுக கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பொதுக்குழு மற்றும் ஒரு செயற்குழு கூட்டம் பாக்கி உள்ளதால் அதனை, இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட வேண்டியதும் அவசியமான ஒன்றாகும். இதை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடசுரபதி பேலஸில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்த இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் சுமார் 4000க்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் தலைவர்கள் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். 300க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்களும் உள்ளனர். எந்த கூட்டத்தின் போது 2026 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அண்மைக்காலமாக இழுபறியில் உள்ள கூட்டணி தொடர்பான பேச்சுகளும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தின் இறுதியில் மத்திய மற்றும் மாநில அரசு எதிராக மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் புயல் பாதிப்புகளால் மக்கள் அவதி அடைந்த நிலையில் இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தாசில்தார், VAO கூட்டாக கைது..!

Next Post

“கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று…” – சீறிய ராகுல் காந்தி

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
“கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று…” – சீறிய ராகுல் காந்தி

“கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று...” - சீறிய ராகுல் காந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In