Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

Work From Home அரசியல்வாதிக்கு CM ஆசையா ? – குவியும் கண்டனங்கள்..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
December 4, 2024
in Default
1
Work From Home அரசியல்வாதிக்கு CM ஆசையா ? – குவியும் கண்டனங்கள்..
26
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நிவாரண உதவிகள்

மத்திய சென்னையில் டி.பி. சத்திரம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

அவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், குழந்தைகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

விஜய் மீது விமர்சனம் 

பொதுவாக தமிழ்நாட்டு அரசியல் களத்தை பொருத்தவரை, தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலத்திட்ட உதவி வழங்குவதுதான் சரியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்போதுதான் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், மக்களின் நிலை குறித்தும் தலைவர்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள முடியும்.‌ ஆனால் அதை விட்டுவிட்டு விஜய் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு வரவைத்து உதவி செய்தது கண் துடைப்பு என விமர்சனம் எழுந்துள்ளது. 

வந்தவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களா என்பதை எப்படி விஜய் உறுதி செய்தார்? மீடியாவில் செய்தி வரவேண்டும் என்பதற்காக இப்படி இதை நடந்து கொண்டாரா? நேரில் செல்வதற்கு விஜய்க்கு என்ன தயக்கம். இன்னும் தன்னை அரசியல்வாதியாக உணராமல் உச்ச நட்சத்திரமாகவே, விஜய் இருந்து வருகிறாரா என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.‌ ஒரு சிலர் விஜய் Work From Home அரசியல்வாதியாக செயல்படுவதாக கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றனர். மக்களை நேரடியாக சந்திக்காத விஜய்க்கு வருகின்ற 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, முதலமைச்சராகும் ஆசை வேற இருப்பதாகவும் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும், விஜய்யின் இந்த செயல் அவரை பின்னோக்கி இழுத்துச் செல்லும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் தரப்பு விளக்கம் என்ன ?

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்களிடமே விஜய் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என விஜய் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கும் கடந்த முறை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உதவிகளை வழங்கிய போது விஜய் திருமண மண்டபங்களை பயன்படுத்தினார். அதே போன்று இப்போதும் மக்கள் இருக்கும் பகுதிக்கு சென்று இந்த உதவியை வழங்கி இருக்கலாம் எனவும் ஒரு சிலர் கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. விஜயின் இந்த செயல் நிச்சயம் அவருக்கு தலைவலியை ஏற்படுத்தி இருப்பது என்பதில் மாற்று கருத்து இல்லை.

Previous Post

“விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா ரெட்டி அட்டாக்..!

Next Post

மெரினாவில் வருகிறது ரோப் கார் சேவை: தமிழ்நாடு அரசு அதிரடி..குஷியில் சென்னை மக்கள்…

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
மெரினாவில் வருகிறது ரோப் கார் சேவை: தமிழ்நாடு அரசு அதிரடி..குஷியில் சென்னை மக்கள்…

மெரினாவில் வருகிறது ரோப் கார் சேவை: தமிழ்நாடு அரசு அதிரடி..குஷியில் சென்னை மக்கள்...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In