Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இரட்டை இலை சின்னம் ஒதுக்க OPS-யும் கேட்கவேண்டும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
December 4, 2024
in Default
0
இரட்டை இலை சின்னம் ஒதுக்க OPS-யும் கேட்கவேண்டும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு..
30
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்திற்கு பதிலளித்த போது, “நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க வேண்டும்” என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்

அதில் உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றது. அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

அப்போது ஓ. பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. எங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இபிஎஸ் ,ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

Previous Post

அதானி ஊழல் எதிரொலி: நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி MP-க்கள் இன்றும் போராட்டம்- ராஜ்யசபாவில் வெளிநடப்பு..!

Next Post

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு : முக்கிய தீர்மானங்கள்களை நிறைவேற்றிய ஸ்டாலின்…

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு : முக்கிய தீர்மானங்கள்களை நிறைவேற்றிய ஸ்டாலின்…

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு : முக்கிய தீர்மானங்கள்களை நிறைவேற்றிய ஸ்டாலின்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In