Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஐதராபாத்தில் பதுங்கிய கஸ்தூரி, முகாமிட்ட தமிழ்நாடு போலீஸ்..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 16, 2024
in Default
1
ஐதராபாத்தில் பதுங்கிய கஸ்தூரி, முகாமிட்ட தமிழ்நாடு போலீஸ்..
47
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கஸ்தூரியை தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார். இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். நடிகை கஸ்தூரி சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், ஐதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தமிழக போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கஸ்தூரி போலீசாரால் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில் கஸ்தூரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் 4 பிரிவுகள் பிணையில் வெளியில் வரமுடியாத வழக்குகள் ஆகும் எனவும் வாதாடினார். மேலும் ஜாமின் தரக்கூடாது எனவும் கோரினார். 

இதைத்தொடர்ந்து வாதாடிய கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர், “கஸ்தூரி சிலரை மட்டுமே குறிப்பிட்டார். பொதுவாக சொல்லவில்லை. இருந்தாலும் வருத்தம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார். 

அப்போது பேசிய நீதிபதி “சிலரை மட்டுமே அவர் குறிப்பிட்டார் என்றால் ஏன் அந்தப்புரம் என்ற வார்த்தை வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? அவரின் வருத்தம் தெரிவிக்கும் பதிவு அவர் பேசியதை நியாயப்படுத்துகிறார் என்ற தோற்றத்தை கொடுக்கிறது. அந்த குறிப்பிட்ட வார்த்தைக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில் நேற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்..

Next Post

`கண்ணியத்துடன் பேச வேண்டும்’ – சி.வி. சண்முகத்துக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
`கண்ணியத்துடன் பேச வேண்டும்’ – சி.வி. சண்முகத்துக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்..

`கண்ணியத்துடன் பேச வேண்டும்’ - சி.வி. சண்முகத்துக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In