Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.10 கோடி ஒதுக்கீடு: திருவண்ணாமலையில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 19, 2024
in Default
1
ரூ.10 கோடி ஒதுக்கீடு: திருவண்ணாமலையில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி..
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையும், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கு உரிமைத்தொகையும் வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றுள்ளார்.

இன்று (அக்டோபர் 19) திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 803 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ.78.05 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்’ மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1480 ஊராட்சி மன்றங்களுக்கு 1850 எண்ணிக்கையிலான விளையாட்டு உபகரண தொகுப்புகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.

Image

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு திராவிட மாடல் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் கோரிக்கை. முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். 2 ஆண்டுகளில் 513 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மகளிருக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 43 சதவிகித மகளிர் வேலைக்கு செல்கின்றனர். இது நமக்கு கிடைத்த பெருமை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை 1.16 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் சில குறைபாடுகள் இருக்கிறது.

எங்களுடைய பெயர் விடுபட்டுள்ளது. பக்கத்து வீட்டு அக்காவுக்கு 1000 ரூபாய் வருகிறது. எங்களுக்கு வரவில்லை என்று சில பெண்கள் சொல்கிறார்கள். உறுதியாக சொல்கிறேன், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமை தொகை விரைவில் வழங்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தோம். அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியம் ஓராண்டில் அமைத்து தரப்படும் ” என்று அறிவித்தார்.

Previous Post

உயர் நீதிமன்றம் குட்டு..தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல, தீட்சிதர்கள் என்ன கடவுளை விட மேலானவர்களா.?

Next Post

உழைக்கும் எங்களைப் பார்த்தால், மக்களால் நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்..! உதயநிதி கலாய்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
உழைக்கும் எங்களைப் பார்த்தால், மக்களால் நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்..! உதயநிதி கலாய்..

உழைக்கும் எங்களைப் பார்த்தால், மக்களால் நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்..! உதயநிதி கலாய்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ஹாக்கி ஸ்டேடியத்திற்கு 10 கோடி செலவு பண்ணும் நம் விளையாட்டு துறை அமைச்சர் அந்தப் பணத்தை அந்த மாவட்டத்தின் முக்கிய தேவையான மருத்துவ வசதிக்கும் சாலை பணிகளுக்கும் கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த மாவட்டத்தை பொருத்தவரை ஹாக்கி ஸ்டேடியம் தேவையில்லாதது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In