Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருவள்ளுவர் பிறந்தநாள் எப்போது?-நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
September 21, 2024
in Default
1
திருவள்ளுவர் பிறந்தநாள் எப்போது?-நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் பிறந்த தினம் இல்லை என அறிவிக்கக் கோரி ‘திருவள்ளுவர் திருநாள் கழகம்’ என்ற அமைப்பின் தலைவர் சுவாமி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என அறிவிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. 1935 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மறைமலை அடிகள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டார். மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோவில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினத்தில்தான் கட்டப்பட்டது என மனுதாரர் தெரிவித்தார்.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தை மாதம் இரண்டாம் தேதி திருவள்ளுவரைப் போற்றும் வகையில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக தமிழக அரசு அந்த நாளை அறிவிக்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யும் படி கோரிக்கை விடுத்தார். இரண்டு  தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் அதே நேரத்தில் அந்த தினத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக அரசு எங்கேயும் அறிவிக்கவில்லை. அதேபோல் மனுதாரர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்ததால் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளை திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

Previous Post

இனி அரசு பேருந்துகளில்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை..

Next Post

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டது: தலைமை அர்ச்சகர் கடும் கண்டனம்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டது: தலைமை அர்ச்சகர் கடும் கண்டனம்..

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டது: தலைமை அர்ச்சகர் கடும் கண்டனம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄😄😄😄😄😄🌹🌹🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In