Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரயில்வேயில் 7,951 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் தான் டைம்..!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
ரயில்வேயில் 7,951 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் தான் டைம்..!
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

RRB Junior Engineers Recruitment 2024 : இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர், டிப்போ பொருள் கண்காணிப்பாளர், இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர், இரசாயன கண்காணிப்பாளர் மற்றும் உலோகவியல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 7,951 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தியன் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டு விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.

இரசாயன & உலோகவியல் கண்காணிப்பாளர்/ஆராய்ச்சி ஆகிய பதவிகளுக்கு 17 காலிப்பணியிடங்களும், ஜூனியர் இன்ஜினியர், டிப்போ பொருள் கண்காணிப்பாளர், இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிக்கு 7,934 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. இரசாயன & உலோகவியல் கண்காணிப்பாளர்/ஆராய்ச்சி பதவிக்கான 17 இடங்கள் கோரக்பூரில் மட்டும் உள்ளது.

என்ன வயதினர் விண்ணப்பிக்கலாம்?

என்ன வயதினர் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் ரயில்வேயில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.01.2025 ஆம் தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 36 வயது வரை இருக்கலாம். மேலும், விண்ணப்பதார்கள் 01.01.2007 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். அதே போல், பொதுப்பிரிவினர் 02.01.1989 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. ஒபிசி பிரிவினர் 02.01.1986 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. எஸ்சி/எஸ்டி பிரிவினர் 02.01.1984 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. கூடுதலாக எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

எவ்வளவு சம்பளம் :

எவ்வளவு சம்பளம் :

இந்தியன் ரயில்வேயில் மத்திய அரசு 7வது ஊதிய குழுவின் படி மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
இரசாயன & உலோகவியல் கண்காணிப்பாளர்/ஆராய்ச்சி பதவிகளுக்கு நிலை 7-யின் படி குறைந்தபட்ச ரூ.44,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
ஜூனியர் இன்ஜினியர், டிப்போ பொருள் கண்காணிப்பாளர், இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிக்கு நிலை 6-யின் படி குறைந்தபட்ச ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1,12,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • இந்தியன் ரயில்வேயில், எலெக்ரிக்கல், டிசைன் வடிவமைப்பு, மெக்கானிக்கல், சிவில், தொலைத்தொடர்பு மற்றும் டீசல் மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் உள்ள ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / உற்பத்தி / மெகாட்ரானிக்ஸ் / தொழில்துறை / எந்திரம் / கருவிகள் மற்றும் கட்டுப்பாடு / கருவிகள் மற்றும் இயந்திரம் / கருவிகள் மற்றும் டை மேக்கிங் / ஆட்டோமொபைல் / உற்பத்தி பொறியியல்/ சிவில் ஆகிய பொறியியல் பிரிவுகளில் 3 ஆண்டுகள் டிப்ளமோ அல்லது B.E/B.Tech டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
  • இரசாயன கண்காணிப்பாளர்/ஆராய்ச்சி பதவிகளுக்கு வேதியியல் தொழில்நுட்பத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
  • உலோகவியல் கண்காணிப்பாளர்/ஆராய்ச்சி பதவிகளுக்கு உலோகவியல் இன்ஜினியரிங் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிக்கு இயற்பியல்/ வேதியியலில் இளங்கலை டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
  • டிப்போ பொருள் கண்காணிப்பாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடத்தப்படும்

எழுத்துத் தேர்வு நடத்தப்படும்

இந்தியன் ரயில்வேயில் உள்ள 7,951 காலிப்பணியிடங்களுக்கு நான்கு கட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தில் தகுதி அடையும்பட்சத்தில் இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

ஆர்வமும் தகுதியுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற ரயில்வே ஆர்சேர்ப்பு வாரியத்தில் இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 29.08.2024ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் திருத்தம் செய்ய 30.08.2024 முதல் 08.09.2024 தேதி வரை செய்துகொள்ளலாம். கணினி வழியாக நடைபெறும் தேர்வுகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Previous Post

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் கழிவுகள்; சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு!

Next Post

இளநீர் இட்லி முதல் பருத்திப்பால் அல்வா வரை.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கமகம விருந்து..!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
இளநீர் இட்லி முதல் பருத்திப்பால் அல்வா வரை.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கமகம விருந்து..!

இளநீர் இட்லி முதல் பருத்திப்பால் அல்வா வரை.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கமகம விருந்து..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ரயில்வே துறையை பொருத்தவரை தமிழர்களுக்கு கிடையாது. அதில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் ஒன்று வட மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு கொடுப்பார்கள் அடுத்து கேரளா மாநிலத்தைச் சார்ந்த நபர்களுக்கு வழங்குவார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In